கொதிப்பான சூழலிலும் குளிர்ச்சியைத் தேடும் மனம்! | பாற்கடல் 46

கொதிப்பான சூழலிலும் குளிர்ச்சியைத் தேடும் மனம்! | பாற்கடல் 46
Updated on
2 min read

‘உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங் குது... கலகம் வருது தீருது... அச்சுக் கலையால் நிலைமை மாறுது...’ என்று சிவாஜி கணேசன் திரைப்படம் ஒன்றில், டிரடில் அச்சு இயந்திரத்தை ஓட்டிக்கொண்டே பாடுவார். படத்தில் அதுதான் அவர் தொழில். அச்சகமும் அச்சுத் தொழிலும் அவ்வளவுப் பிரபலமானது.

தையல் இயந்திரத்தைக் காலால் ஓட்டுவதுபோல டிரடில் (Treadle) பொருத்தப்பட்ட அச்சு இயந்திரத்தையும் காலால் இயக்கலாம். அழுத்தி அச்சிடு வதற்கேற்ப அச்சு இயந்திரங்கள் பொதுவாகவே கனமானவையாக இருக்கும். ஒரு டிரடில் மிஷினும் தாளை வெட்டு வதற்கு வெட்டும் இயந்திரமும் இருந்தால் போதும், சிறிய அளவில் அச்சகம் ஒன்றை ஆரம்பித்துவிடலாம். இயந்திரங் களுக்காகக் கொஞ்சம் பணம் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

விதவிதமான அளவுகளில் (8 பாயிண்ட்,10 பாயிண்ட் 12, 13 பாயிண்டுகள்) ஈய எழுத்துகள், பார்டர் டிசைன்களுக்கு முதலீடு குறைவுதான். அவை தேய்ந்து போனால்கூட அவற்றைப் பழைய விலைக்கு எடுத்துக்கொண்டு புதிய அச்சுஎழுத்துகளைத் தருவார்கள். அச்சு எழுத்துகளைத் தயாரித்துப் பலருக்கும் வாழ்வாதாரம் வழங்கியதில் சென்னை யில் இருந்த நெல்சன் மாணிக்கம் முன்னணியில் இருந்தவர். அவரது அச்செழுத்து தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த சாலை இன்றும் அவர் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in