வேட்டு வைத்த பாயசம்! | அலுவலக அலப்பறைகள்

வேட்டு வைத்த பாயசம்! | அலுவலக அலப்பறைகள்
Updated on
2 min read

அந்த அலுவலகம் அன்று காலை வழக்கம்போல் அமைதியாக இருந்தது. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு பளபளக்கும் கார் ஒன்று வந்து நின்றது. அலுவலகம் சட்டென்று பரபரப்பானது. வசந்தராஜன் காரிலிருந்து இறங்கினார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.

வசந்தராஜனின் வருகை குறித்து ஊழியர் களுக்கு ஒருவர் மூலம் முன்கூட்டியே தகவல் போய்விடும். அரட்டை அடிப்பவர்கள், அங்கு மிங்கும் அலைபவர்கள் சட்டென்று கையில் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர். வசந்தராஜன் ஊழியர்களை நோட்டமிட்ட படி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

அவர் பணியை இப்போதெல்லாம் சிசிடிவி கேமராக்கள் செய்துவிடுவதால், அவர் அதிக மாக அலட்டிக்கொள்வதில்லை. அவர் இருக்கையின் வலதுபக்கத்தில் பொற் காசுகளைக் கொட்டிக்கொண்டிருந்த மகா லட்சுமிக்கும் அவர் அருகிலேயே வீற்றிருந்த வேங்கடாசலபதிக்கும் ஒரு நமஸ்காரத்தைப் போட்டுவிட்டு, தன் இருக்கையில் அமர்ந்தார் வசந்தராஜன்.

பிறகு தன் முன்னால் இருக்கும் கணினியின் தூக்கத்தைக் கலைத்தார். அந்த அலுவலகத்திலேயே அவர் வருகையை எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்வது, அது மட்டும்தான்! இருக்கையில் அமர்ந்ததும் டிவி ரிமோட்டை இயக்கினார். அலுவலகத்தின் பல பிரிவுகளும் காட்சிக்குப் புலப்பட்டன.

வசந்தராஜனின் உதவியாளர் பிரகாஷ். எத்தனை முறை வசந்தராஜன் அழைப்புமணியை அடித்தாலும், சிரித்த முகத் தோடு கதவைத் திறந்துகொண்டு நுழைவார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in