‘பஞ்சதந்திரம் மூணு கொடுப்பா!’ | அலுவலக அலப்பறைகள்

‘பஞ்சதந்திரம் மூணு கொடுப்பா!’ | அலுவலக அலப்பறைகள்
Updated on: 
2 min read

வசந்தராஜன் நிர்வாகத்தில் அந்த லாஜிஸ்டிக்ஸ் அலுவலகம் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அப்படியும் ஒருவர் செக்யூரிட்டி களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அலுவலகத்துக்குள் நுழைந்து வசந்தராஜன் அறைக்குப் பக்கத்தில் வந்துவிட்டார். கடிதங்களைப் பிரித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, யார் வேணும் என அவரிடம் கேட்டார்.

“இந்தாப்பா, பஞ்சதந்திரம் படத்துக்கு மூணு டிக்கெட் கொடுப்பா” என்றார் வந்தவர். “என்ன சொல்றீங்க, என்ன வேணும்?” “ஈவ்னிங் ஷோவுக்கு மூணு டிக்கெட் வேணும்.” அவர் மது குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்பதை அப்போதுதான்உணர்ந்தார் சத்தியமூர்த்தி. “இது தியேட்டர் இல்ல, ஆபிஸ். புறப்படுங்க” என்றார்.

“யோவ், டிக்கெட் இல்லன்னா, டிக்கெட் இல்லன்னு சொல்லு. அதவிட்டுட்டு இது தியேட்டரே இல்லன்னு சொல்ற“ என்று கத்தினார் அந்த நபர். “தியேட்டர் பக்கத்து பில்டிங். புறப்படுங்க” என்றார் சத்தியமூர்த்தி. சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த வசந்தராஜன், “என்ன இங்க ஒரே சத்தம், யார் இவர்?” என்று கேள்விக் கணைகளை வீசினார்.

Loading content, please wait...

X