நம்பியாற்று நாகரிகம் | ஆற்றின் கதை

நம்பியாற்று நாகரிகம் | ஆற்றின் கதை
Updated on: 
3 min read

நம்பியாறு 45 கி.மீ. தூரம் மட்டுமே பயணிக்கும் சிற்றாறு. தான் தவழும் பகுதியில் எல்லாம் பண்பாட்டு விழுமியங்களைக் கூடவே இணைத்துச் செல்கிறது. ஆற்றங்கரை நாணல் போன்று வழிநெடுக ஆன்மிகத்தை, வரலாற்றைச் சுமந்து செல்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையின் நம்பிமலையில் இதன் பயணம் தொடங்குகிறது. இங்கு சோலைமந்திகள் (சிங்கவால் குரங்கு) பெருமளவில் நடமாடும்.

மலையில் கோயில் ஒன்று உள்ளது. திருக்குறுங்குடி ஊருக்குள் இருக்கும் நான்கு நம்பிகளுடன், மலையில் இருக்கும் நின்ற நம்பி (திருமலை நம்பி) என்கிற இந்த நம்பியும் இணைந்து திருக்குறுங்குடி வைணவ 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக உள்ளது.

ஊருக்குள் இருக்கும் அழகிய நம்பிராயர் கோயில் நுழைவாயில் புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கவே பல மணி நேரம் தேவைப்படும். நூல்பிடித்தது போன்று நேராக இருக்கும் மண்டபம்தான் எவ்வளவு அழகு! கோயிலை அடுத்து இருக்கும் ஒரு மண்டபத்தில் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட யாளிச் சிற்பத்தின் வாய்க்குள் சுழலும் கல் உருண்டையை நாயக்கர் ஆட்சிக் கால விந்தை என்றுதான் சொல்ல வேண்டும்.

அகழாய்வும் காட்சியகமும்

தொடர்ந்து நம்பியாற்றின் பயணத்தில் வரும் ஏர்வாடியில் பல புகழ்பெற்ற மசூதிகள் இருக்கின்றன. சிறிது தூரத்தில் ஆற்றின் தெற்குப் பகுதியிலிருக்கும் ஊர் துலுக்கர்பட்டி. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பல அரிய பொருள்கள் கிடைத்துள்ளன. தனிநபர் பெயர்களான ‘ஆத(ன்), ‘திஈய(ன்), திச(ன்) குவிர(ன்) என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

‘புலி’ என்னும் விலங்கின் பெயர் பொறிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பொருள்கள் கிடைத்து, அவை பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. துலுக்கர்பட்டியிலிருந்து ஓரிரு கி.மீ. ஆற்றின் பாதையில் பயணித்தால் வடகரையில் முத்துலாபுரம் செபஸ்தியார் கோயில் வருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in