தென்றல் தாலாட்டும் மேக்கரை! | சுற்றுலா

தென்றல் தாலாட்டும் மேக்கரை! | சுற்றுலா
Updated on
3 min read

நேர்த்தியான ஓவியரால் தீட்டப்பட்ட ஓவியம் போல் பேரழகுடன் காணப்பட்டது அந்த வயல்வெளி. சாலையின் இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வயல்களில் நெற்கதிர்கள் தலையாட்டிக்கொண்டிருந்தன.

தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அதன் அடிவாரத்தில் தென்னை மரங்களுமாக அந்தக் காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது! அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் சூரிய உதயத்தைக் கண்டபோது மனதுக்குள் பரவசம் ஊற்றெடுத்தது. மேக்கரைக்கு வந்த நோக்கத்தை அந்த ஒரு காட்சியே நிறைவேற்றிவிட்டது! தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கிறது மேக்கரை.

மெய்மறந்து பார்த்துக்கொண்டு நின்றபோது, சில வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள் ஒளிப்படக்கருவிகளில் காட்சிகளைப் பத்திரப் படுத்திக்கொண்டிருந்தார்கள். சிலர் வயல் என்கிற பிரக்ஞை இன்றி, நெற்கதிர்களை மிதித்துக்கொண்டு ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந் தனர். நாங்கள் அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம்.

வயலின் ஓரத்தில் கோரைப்புற்கள் களைச்செடிபோல் வளர்ந்திருந்தன. இந்தக் கோரைப்புற்கள் மிகவும் வலிமையாக இருக் கின்றன. அதனால்தான் கோரைப்புல்லில் உரு வாக்கும் பாய்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன.

சிறிது தூரம் சென்றபோது அடவிநயினார் அணையிலிருந்து, தண்ணீர்ப் பெருக்கெடுக் கும் மற்றோர் அழகான காட்சியைக் கண்டு ரசித்தோம். ஒரு பக்கம் தண்ணீர் கொட்டும் அணையும் அதன் அடியில் கால்வாயும் எதிரில் வயல்வெளியும். அடடா! பச்சை வயல்வெளி யின் நடுவே ஆங்காங்கே ஒன்றிரண்டு கரண்டி வாயன்கள் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன!

சிற்றருவிகள்

தென்காசியிலிருந்து மேக்கரைச் செல்லும் பாதையே ரம்மியமாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உற்பத்தியாகும் அனுமன், தேன்பாறை, எருமைச்சாடி ஆகிய ஆறுகள் இந்தக் கிராமத்தில் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. மேக்கரையின் மூன்று பக்கங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்துள்ளதால் இளம் குளிரும் பனிமூட்டமும் கிராமத்தை மூடியுள்ளன.

ஆறுகள் சூழ்ந்த மேக்கரையில் ஆங் காங்கே சிற்றருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகளை ஒட்டி, தனியார் தங்கும் விடுதிகளும் தோட்டங்களும் கட்டப்பட்டி ருக்கின்றன. சீசன் காலத்தில் இந்தச் சிற்றருவிகளில் நீர் தாராளமாக வருகிறது. இதில் குளிப்பதற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in