மழையின் சுபாவம் | மயில்கள் அகவும் பெருநிலம் 25

மழையின் சுபாவம் | மயில்கள் அகவும் பெருநிலம் 25
Updated on
2 min read

பிரபவ வருடத்து ஆனி மாதம். கோடைக்காற்றும் கோடைமுகிலும் வீரியம் கொண்டி ருந்த பின்மதிய வேளை. எங்கள் தோட்டத்திலிருந்து மேற்கே கொறங்காட்டில் (மேய்ச்சல் காடு) மேயும் மாடுகளை ஓட்டிவர நான் சென்றிருந்தேன்.

போகும் வழியில் கோபால் அண்ணனும் நாகராஜ் அண்ணனும் மாட்டுக் கட்டுத்தரையில் மாடுகளின் தீனியைக் கோடைக்காற்று அடித்துச் செல்லாமல் இருக்க ஒதுக்குப்படல்களைக் கட்டிக்கொண்டிருந்தனர். நான் அவர்கள் பேசும் ஊர்க்கதைகளோடு ஐக்கியமாகி நின்றுவிட்டேன்.

சற்றுத் தள்ளி குடைச்சீத்தை மரத்தினடியில் அமர்ந்திருந்த கோபால் அண்ணனின் தந்தை யான ‘சரி அய்யன்' என்னிடம் சொன்னார். “அப்புனு… கோடையும் கொங்கனும் போர் புரிந்து உழவு மழைக்கு மேல் பொழியப் போகிறது. நீ உடனே உன் மாடுகளை ஓட்டிக் கொண்டு போய்விடு, தாமசப்படுத்தாதே.”

என்னவென்று புரியாமல் சரி அய்யனை நான் பார்த்தேன். நாகராஜ் அண்ணன் அதற்கான விளக்கத்தைக் கொடுத்தார். “மேற்கே இருந்து போகிற கோடை முகிலும் கிழக்கே இருந்து வர்ற கொண்டல் முகிலும் மோதி உழவு மழைக்கு மேல் பெய்யப் போகுதுன்னு சொல்றாரு.” நான் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த் தேன்.

கருங்கோடை முகில் கூட்டங்கள் மட்டும் கிழக்கு நோக்கிப் போயின. மேற்கு நோக்கி எந்த முகில் கூட்டமும் நகரவில்லை. அப்போது சரி அய்யன் எழுந்து கோலை ஊன்றியபடி வீட்டைப் பார்த்து நடந்தார். அந்தி மஞ்சள் வெயிலும் மங்கிற்று. ஆகாயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நான் மேலும் சிறிதுநேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, எங்கள் கொறங்காடு நோக்கிப் போனேன். கடவுப்படலைப் திறந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு நடந்தேன்.

மாடுகள், குடைச்சீத்தை மரங்கள் சூழ்ந்த தரிசுவெளியின் ஊடே செல்லும் இட்டேரியில் (இருபுறமும் கிளுவை வேலியுள்ள மண்பாதை) நுழைந்தன. திடீரென உச்சி ஆகாயத்தில் பளீரென்ற மின்னல். நிலம் அதிரும்படி கனத்த இடி. மழை கல்லுமாரிகளாகக் (ஆலங்கட்டி மழை) கொட்டியது. மாடுகள் வாலை நட்டவைத்து ஓட்டமெடுத்து விட்டன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in