வெள்ளித்திரை கனவின் மறுபக்கம் | மயில்கள் அகவும் பெருநிலம் 48

வெள்ளித்திரை கனவின் மறுபக்கம் | மயில்கள் அகவும் பெருநிலம் 48
Updated on
2 min read

துன்முகி வருடத்து மாசி மாதம். அப்பாவைப் பார்க்க ஊருக்குப் போயிருந்த தருணம். இரண்டாம் சாமம் கடந்துகொண்டிருந்தது. செம்மூக்கு ஆள்காட்டிகளும் காட்டுப் பக்கிகளும் குரலிடுவதைத் தவிர தோட்டவெளி எங்கும் பெருநிசப்தம் பூண்டிருந்தது.

எங்கள் தோட்டத்து வீட்டுத் தென்னங்கீற்றுப் பந்தலடித் திண்ணையில் படுத்திருந்த எனக்கு, உறக்கமே வரவில்லை. மனத்திரையில் ஒருவரின் முகம் திரும்பத் திரும்ப நிழலாடியது. எதற்காக அந்த முகத்துக்கு உரியவரை நினைக்கிறேன் என்பதும் புரியவில்லை. எழுந்து உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கினேன். நெடுநேரம் கழித்தும் அந்த முகத்துக்கு உரிய நபர் நினைவுக்கு வரவில்லை.

மறுநாள் விடிந்ததும் திண்ணையின் இன்னொரு மூலையில் கிடந்த பழைய வாரப் பத்திரிகையின் அட்டைப்படம் கண்ணில் பட்டது. அதில் இடம் பெற்றிருந்த மீசையில்லாத திரைப் பட நடிகருக்கு யாரோ மீசை வரைந்தி ருந்தனர். மீசை வரையப்பட்ட அந்த நடிகரின் முகம் நேற்றிரவு என் ஞாபகத் துக்கு வராத, அந்த முகத்துக்கு உரிய நபரை அடையாளம் காட்டியது.

விக்கிரம வருடத்து மார்கழி. எழுத்தாளர் தேவிபாரதி முன்னெடுப் பில் ‘பாதம்’ என்கிற அமைப்பை ஏற்படுத்திக் கொங்கு கூத்துக் கலைகளை ஊடகவெளிக்கு அறிமுகப் படுத்தும் செயலில் இறங்கினோம். ஈரோடு அருகே எழுமாத்தூரில் உள்ள அல் அமீன் கல்லூரியில் உடுக்கைக் கூத்து, மதுரைவீரன் கூத்து போன்ற வற்றைக் கலைசார்ந்த ஆளுமைகளின் முன்பு நிகழ்த்திக் காட்ட ஏற்பாடும் செய்தோம்.

அங்கு பார்வையாளராக வந்த ஒரு நபர் தனித்த ஆளுமையுடன் இருந்தார். வெள்ளை வேட்டி - சட்டையில் தடித்த மீசையுடன் அரசியல்வாதிக்கான தோற்றம். கையில் குடை வைத்திருந்தார். ஐம்பது வயது இருக்கக்கூடும். தேவிபாரதியிடம் அவரைக் குறித்து விசாரித்தேன். தேவிபாரதி, அவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்று மட்டும் கூறினார். அப்போது உடனிருந்த தேவிபாரதியின் நண்பர் என்னிடம் சொன்னார்.

“மகாதேவன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) சினிமா எடுத்த கதையைக் கேட்டீங்கன்னா கண்ணுல தண்ணி வந்துரும்…” எனக்குள் மகாதேவன் திரைப்படம் தயாரித்த துயரக் கதையைக் கேட்கும் ஆவல் தொற்றியது. அன்றிரவு மதுரைவீரன் கூத்து முடிந்த பின் தேவிபாரதியின் நண்பரிடம் மகாதேவன் குறித்து விசாரித்தேன். அவர் முன்பனி பொழியும் கல்லூரியின் மைதானவெளிக்குக் கூட்டிச் சென்று மெதுவான குரலில் சொல்லத் தொடங்கினார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in