கொம்பூதியின் துயர்கானம் | மயில்கள் அகவும் பெருநிலம் 39

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

Updated on
3 min read

கார்மழை பெய்யாத பங்குனியின் வைகறை. இருள் விலகும் நேரம். எங்கள் தோட்டத்து வீட்டு வெளிவாசலில் கொட்டுமுழக்கு (பறை) முழங்கிற்று. கொம்பு (தாரை) ஊதப்பட்டது. நான் உறக்கம் கலைந்து எழுந்து வெளித்திண்ணைக்குச் சென் றேன். திடுமுட்டிக்காரர்கள் (ஊருக்குச் சேதி சொல்பவர்கள்) சத்தமிட்டனர்.

“நம்ம இச்சுப்பட்டி மாரியம்மன் பொங்கல் சாட்டியிருக்குதுங்கோ…” திடுமுட்டிக்காரர்களின் மக்கிரியில் (பெரிய கூடை) அம்மாவும் பெரியம்மாவும் தானியம் இட்டனர். கொம்பூதி ஊதும் தோரணையும் கொம்பின் ஓசையும் என்னை வசீகரித்துவிட்டன. மறுபடியும் கொம்பு ஊதச் சொல்லி அடம்பிடித்தேன். அவரும் ஊதினார். என் இளம் பிராயத்தில் கொம்பூதி குறித்த முதல் நினைவுச் சித்திரம் இதுதான்.

விக்கிரம வருடத்து ஐப்பசி. அடைமழை இறங்காத நாள். ஆகாயம் வெளுத்துக் கருமுகிலின்றி நிர்மலமாகக் காட்சியளித்தது. நண்பகலில் எங்கள் தோட்டம் வந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் சொன்னார்: “நான் இன்னும் கொடுமுடி போனதில்லை…” உடனே நாங்கள் புறப்பட்டுவிட்டோம்.

பேருந்தில் கொடுமுடி போய்ச் சேர்ந்தபோது பின்மதியம் கடந்துவிட்டது. மகுடேஸ்வரர் கோயில் நடை திறக்கவில்லை. நேராகக் காவிரி ஆற்றுப் படித்துறைக்குச் சென்றோம். பழநிக்குத் தீர்த்தக்காவடி எடுக்கும் பக்தர்கள் எவருமில்லை.

படித்துறையும் வெறிச்சிட்டுக் கிடந்தது. காவிரியிலும் ஆள் உயர நீர்ப்பிரவாகம். அக்கரை ஊர்களுக்குச் செல்பவர்களுக் காக நீரோட்டத்தை ஒட்டிய படியில் வயதானவர் பரிசலுடன் காத்திருந்தார். க.சீ.சிவக்குமார் யாரிடமோ பேசுவதற்காகத் தொலை பேசி கூண்டுள்ள கடையை நோக்கிப் போய்விட்டார்.

நான் அந்தி மஞ்சள் வெயில் படிந்த காவிரி நீர்ப்பிரவாகத்தைப் பார்த்த படியே படித்துறையின் மேல்படிக் கட்டில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என்னருகில் வந்து ஒருவர் தீப்பெட்டி கேட்டார். நான் இல்லையெனத் தலையசைத்தேன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in