கட்டுத்தரையின் கடைசி வசீகரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 32

கட்டுத்தரையின் கடைசி வசீகரம் | மயில்கள் அகவும் பெருநிலம் 32
Updated on
3 min read

சிறப்பாகப் பருவமழை பொழிந்து காலம் செழித்த முக வருடத்தின் ஐப்பசி. மேய்ச்சல் குறுங்காடுகள் எங்கும் கொழுக்கற்றைகளும் செவ்வருகுகளும் செப்புநெருஞ்சில்களும் அடர்ந்து வளர்ந்துவிட்டன. எங்கள் கட்டுத்தரையில் (தொழுவம்) கறவை எருமைகளே நிறைந்திருந்தன.

தூரத்துக் குறுங்காடுகளின் பசும்புற்களை மேய காங்கேயம் பசுக்கள் இல்லை. உழவு காளைகள் இல்லாதவன் விவசாயி கிடையாது என்பது அப்பாவின் எண்ணம். திடீரென அப்பா வியாபாரியை வரவழைத்துக் கட்டுத்தரையில் இருந்த இரண்டு சினை எருமைகளை விற்றார். எனக்கு, அம்மாவுக்கு, தங்கைக்கு அப்பாவின் செயல் புதிராகவே இருந்தது.

அடைமழை தூறிய திங்கள்கிழமை வைகறையில் அப்பாகாங்கேயம் சந்தைக்குப் புறப்பட்டுப்போனார். ஆகாயத்தில் மழை முகில்களுக்கு இடையே பொழுது வெளிப்பட்ட மதியத்தில் அப்பா வாடகை டெம்போவில் கட்டுத்தரை வந்துசேர்ந்தார்.

இரண்டு வெள்ளை மாடுகளை இளங்காளைக் கன்று களுடன் டெம்போவிலிருந்து இறக்கிக் கட்டுத்தரைப் பந்தல் முளைக் குச்சிகளில் கட்டினார். அந்தியில் கட்டுத்தரை வந்த பெரியப்பா முதலில் இரண்டு இளங்காளைக் கன்றுகளை யும் பார்வையிட்டபடி சொன்னார்.

“ரெண்டும் லட்சணமான கன்னுக் குட்டிக… வயித்துல இருந்து ஈனி பத்து நாள்கூட ஆகியிருக்காது. நாளா வட்டத்துல ஒண்ணு செவலையாகவும் இன்னொண்ணு மயிலையாகவும் மாறும்.” அடுத்து பெரியப்பா இரண்டு மாடுகளின் பற்களை எண்ணிக் கணக் கிட்டபடியே சொன்னார்.

“மாடுக ரெண்டும் கெழடுதட்டிப் போச்சு. பல்லும் கடை சேர்ந்திருச்சு. கூளம் கடிக் கிறதே சிரமம். இதுகள அடைமழைக்கு நனையாம பார்த்துக்கப்பா.” மூன்று நாள்கள் கழிந்தன. முதல் சேவல் கூவிற்று. அம்மா எழுந்து எருமைகளில் பால் கறக்கக்கட்டுத்தரை சென்றவர் எங்களைச்சத்தமிட்டுக் கூப்பிட்டார்.

நாங்களும் எழுந்து கட்டுத்தரைக்கு ஓடினோம். செவலைக் காளைக் கன்றின் தாயான கிழட்டு மாட்டின் நான்கு கால்களும் மூத்திரத்தரையில் பரப்பிக் கிடந்தன. வெறித்த கண்களில் இமைகள் மூடவில்லை. அப்பா என்னிடம் சொன்னார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in