மூக்குத்திக் காகமும் சித்தப்பாவும் | மயில்கள் அகவும் பெருநிலம் 13

மூக்குத்திக் காகமும் சித்தப்பாவும் | மயில்கள் அகவும் பெருநிலம் 13
Updated on
2 min read

துன்மதி வருடத்து அக்னி நட்சத்திரக் காலம். பள்ளிக் கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நாளின் உச்சிப்பகல் வேளை. தோட்டத்து வீட்டின் வடக்குப் புறத்துப் புகையிலைச் சாவடியில் குடும்பத்தினர் அனை வரும் அம்பாரத்துப் புகையிலைகளுக்குக் கருப்பட்டித் தண்ணீரும் உப்புத் தண்ணீரும் தெளித்துப் பதப்படுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டி ருந்தனர். அம்பாரத்தின் கீழே பித்தளை அண்டாதண்ணீரில் தெண்டபாணி சித்தப்பா கருப்பட்டி யைக் கரைத்துக்கொண்டிருந்தார். நானும் கண்ணப்பண்ணனும் புகையிலை அம்பாரத்தின் மீது ஏறி விளையாடச் செல்வதற் காக வாசலில் வந்து நின்றோம். அந்தக் கணம் வாசலில் கரைந்த படி வட்டமிட்டுப் பறந்த காகம், சட்டென ஆசாரத்து (முற்றம்) நடைக்குள்ளே பறந்து போவதைக் கண்டோம். உடனே நாங்கள் சப்தமிட்டோம்.

“காக்கா புகுந்திருச்சு… காக்கா புகுந்தி ருச்சு…”

தெண்டபாணி சித்தப்பா ஈரக்கைகளை வேட்டியில் துடைத்தபடி வாசலுக்கு வந்து நின்று கேட்டார்:

“எங்கடா புகுந்திருச்சு?”

நாங்கள் அவரை ஆசாரத்துக்குள் கூட்டிப்போய்க் காட்டினோம். காகம் ஆசாரத்தின் மேற்கு மூலை விட்டத்தின் கீழே பறந்தபடி இருந்தது. அந்த இடத்தில் எண்ணெய் ஆட்டுவதற்காகக் காய்ந்த தேங்காய்ப் பருப்புகள் குவிக்கப்பட்டி ருந்தன. தெண்டபாணி சித்தப்பா ஆசாரத்து நடையின் கதவைச் சாத்தித் தாழிட்டபடியே சொன்னார்: “இது திருட்டுக் காக்கா. தேங்காய்ப் பருப்பைக் கொத்திப் போக வந்திருக்கு. அடிச்சுக் கொல்வோமுடா.”

அப்போது வெளித்திண்ணையில் உட்கார்ந் திருந்த ஆத்தா (அப்பாவின் அம்மா) சப்த மிட்டார்.

“ஊட்டுக்குள்ள வெச்சு காக்காய அடிச்சு கொன்னு போடாதப்பா. குடும்பத்துக்கு ஆகாது.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in