

பின்பனிக்காலத்துக் குளிர்க் கொண்டல் சன்னல் வழியாக ஊடுருவிற்று. சன்னலுக்கு வெளியே ஊமைவெளிச்சம் பரவிய தோட்டவெளியில் தென்னைகளின் தோகை அசைவு தெரிந்தது. செம்போத்துக் குருவி குரலிட்டது.
மாமனாரின் தோட்டத்து வீட்டு உள்ளறையில் உறங்கிக்கொண்டி ருந்த நான் கண்விழித்த பின்பும் படுக்கையிலிருந்து எழாமல் சன்ன லைப் பார்த்தபடி இருந்தேன். அப்போது வீட்டின் முன்வாசல் பக்கம் யாரோ என் மாமனாரோடு உரக்கப் பேசும் குரல் கேட்டது.