

குமாரி, பாலாஜி
சென்னை பிராட்வே பகுதியில் ஏராளமான வாக்ரி (நரிக்குறவர்) மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டுள்ளனர்.
இவர்கள் வாழ்வாதாரத்துக்காகச் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளனர். விழாக் காலங்களில் வியாபாரத்துக்காக ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்குச் செல்வதையும், மீண்டும் சென்னைக்குத் திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.