

பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அரைக்கை சட்டையும் ஆங்காங்கே காற்றோட்ட மாக உள்ள கிழிந்த டிரவுசருமாகத் திரிவோம். பள்ளி விட்டதும் நேராக வீட்டுக்கு ஓடிவந்து, பையை எறிந்துவிட்டு, விளையாடப் புறப்பட்டுவிடுவோம்.
எங்களுடைய முதன்மை உலகமே தீப்பெட்டிப் படங்களும் கோலிக்குண்டுகளும்தான்! அவை வெறும் விளையாட்டுப் பொருள்கள் அல்ல, எங்கள் தலைமுறையின் பொக்கிஷங்கள். இவற்றை வாங்குவதற்காகவே, மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் இருந்த மணி கடைக்குத்தான் செல்வேன்.
ஒருநாள் நண்பன் சண்முகம், “மணி கடையைவிட, பக்கத்துல இருக்கிற பாப்பான் கிணத்து சந்து குண்டர் கடையில வாங்கினா, இன்னும் விலை கம்மியா இருக்கும்.