தனித்துவமான தமிழ்ப் பெயரைத் தேடி... | அனுபவம் புதுமை

தனித்துவமான தமிழ்ப் பெயரைத் தேடி... | அனுபவம் புதுமை
Updated on: 
2 min read

முதல் பெண்குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றிய பேச்சுகள் தொடங்கின. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மலைக்கோயில் ஜோசியரைப் பார்த்துப் பெயர் வைத்தால் நல்லது என்று நெருங்கிய உறவுகள் சொல்ல, நான் மறுத்துவிட்டேன். அவரவர் பங்குக்குப் பெயர்களைப் பரிந்துரைத்தனர்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் வீட்டில் மட்டுமல்ல, உறவுகள், நட்புகளிடம் பெயர் குறித்த கேள்விகள் வந்து விழுந்தன. நான்கு மாதங்கள் கடந்த நிலையில் என் இணையருக்குக் கோபம். ‘குழந்தைக்கு ஒரு பேர் வைக்க ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க?’ என்று கடிந்துகொண்டார்.

மாலை நேரமானால் போதும் குழந்தை யின் அழுகையை நிறுத்துவது கடினமாக இருந்தது. உறவுகளே ஜோசியம் பார்த்து ஒரு பெயரைச் சொல்ல, நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

“ஜோசியக்காரர் சொன்ன பேரு வைக்காட்டியும் பரவால்ல, ஏதாவது ஒரு பேரு வைங்க, இல்லைன்னா குழந்தை இப்படித்தான் அழும்” என்று உறவுக் காரப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நாள் கழித்து வெண்பா, பாலினி, சரித்ரா ஆகிய பெயர்களை இணையரிடம் சொல்லி, அதில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னேன். பெயரை அவர் தேர்வு செய்வதற்குள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்து களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

“வெம்பாவா? அது என்ன பேரு” என்று வயதானவர்கள் கேட்க, “வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பாலினி, மோரினி, தயிரினி, சரித்ரா, தரித்ரான்னு சொல்லுவாங்க” என்று மூன்று பெயர் களையும் மற்றவர்கள் மறுத்தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in