

வரலாறு என்பது நாமிருக்கும் சூழலின் கடந்த காலத்தை அறிவது. அப்படியொரு வரலாற்றின் ஆவணமாக நின்றுகொண்டிருக்கிறது சென்னையிலுள்ள விக்டோரியா அரங்கம். சென்ட்ரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட், சென்னை மாநகhistory of Victoria Hall explainedராட்சி இயங்கிவரும் ரிப்பன் கட்டிடம் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள இது, பேரரசி விக்டோரியாவின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
விஜய நகரம், திருவிதாங்கூர், மைசூர் அரசர்கள் உள்படச் சிலரது நிதியுதவியுடன் உருவாக்கப் பட்ட விக்டோரியா அரங்கம், ஆங்கிலேயக் கட்டிடக் கலைக்கான சான்றுகளில் ஒன்று. ராபர்ட் சிஷோம் வடிவமைப்பில், நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது.
1888இல் கன்னிமாரா பிரபுவின் முயற்சியால் விக்டோரியா அரங்கம் மக்களுக்குத் திறக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. சுகுண விலாச நாடக சபையின் தொடக்கம், நீதிக்கட்சியின் தொடக்கம், ஸ்டீவன்சன் நடத்திய சென்னையின் முதல் சினிமா திரையிடல் உள்படப் பல சிறப்புகள் இந்த அரங்குக்கு உண்டு.
மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதியார் உள்படப் பல தலைவர்கள் இங்கு உரையாற்றி இருக்கின்றனர். ஆக, அடுத்தடுத்துப் பல தலைமுறை யினரோடு உறவு பேணிவநத இந்த அரங்கம் கால மாற்றங்களால் வலுக் குறைந்து, பொலிவிழந்தது.