

காவ்யா, சுந்தர்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள யானைக்கவுனி மூங்கில் பொருள்களுக்குப் புகழ்பெற்றது. இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் ஆர்வம் தற்போது அதிகரித்துவருகிறது. மூங்கில் பாய், ஜன்னல் பாய், மூங்கில் திரை, வெட்டிவேர் பாய் போன்ற பொருள்களை இங்கு முடைகிறார்கள்.
“வெயிலுக்கு ஏற்றதாக மூங்கில் திரை இருப்பதால், வீடுகளுக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். ஒரு முறை வாங்கினால் 5 முதல் 8 ஆண்டுகள்வரை பயன்படுத்தலாம். நடுவில் ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டும், வண்ணம் மாற்ற வேண்டும் என்றாலும் செய்து கொடுத்துவிடுவோம்.