வழிகாட்டும் காந்தியச் சிந்தனைகள்! | கண்காட்சி

வழிகாட்டும் காந்தியச் சிந்தனைகள்! | கண்காட்சி
Updated on: 
2 min read

“காந்தியின் பெயர் நாடு முழுவதும் ஒலித்தாலும், அவரைப் பற்றிய அடிப்படையான செய்திகள் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்லப்பட வில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. எனது சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்காவது காந்தி குறித்துக் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்தக் கண்காட்சியைத் தொடங்கினேன்” என்கிறார் எம்.டி.சந்தர்.

காந்தியவாதியான இவர், தனது வீட்டில் காந்தி நூல்கள் குறித்த கண்காட்சியை நடத்துகிறார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு நடத்தப்படும் இந்தக் கண்காட்சிக்கு இது எட்டாவது ஆண்டு.

மயிலாப்பூர் காந்தி அமைதி நிலையத்தின் முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளரான எம்.டி.சந்தர் (75), காந்தியக் கருத்துகளைப் பரப்புரை செய்தும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தும் வருபவர். இவரது வீடு சென்னை மேற்கு முகப்பேரில் இருக்கிறது. ஆண்டுக்கணக்காக அவர் சேகரித்த காந்திய நூல்கள் அந்த வீட்டு மாடியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

காந்தி நடத்திய ‘ஹரிஜன்’ வார இதழின் சில பிரதிகள், 1958இலிருந்து 1994 வரைக்கும் இந்திய அரசு வெளியிட்ட ‘காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள்’ - வரிசை நூல்கள், அவரது தன்வரலாறான ‘சத்தியசோதனை’யின் பிற மொழிப் பதிப்புகள் உள்ளிட்ட அரிய நூல்களைக் காண முடிகிறது. காந்தியைச் சித்தரிக்கும் சிற்பங்கள், ஓவியங்களோடு சில பொருள்களும் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக, காந்தி வலியுறுத்திய 11 விரதங்களைக் குறிப்பிடும்வகையிலான ஒரு சுவர்க் கடிகாரம். அது மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஓர் ஆசிரமத்தில் வாங்கப்பட்டதாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in