

எனக்கு ஒருமுறையாவது திரையரங்கில் திரைப்படம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சிறு வயதிலிருந்தே இருந்தது. குடும்பச் சூழ்நிலையால் என் ஆசையை அப்பாவிடம் சொன்னதே இல்லை.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப் பிற்காக சென்னைக்கு வந்ததும் என் ஆசை நிறைவேறும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால், பெருந்தொற்றுப் பொதுமுடக்கத்தால் என் கல்லூரிக் காலம் மாமா வீட்டிலேயே கழிந்தது.