

தமிழகத்தில் முதன்முறையாகத் தானியங்கிப் புத்தக விற்பனை இயந்திரம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் தாம்பரம் ரயில் நிலையத்திலும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி ஒரு புது முயற்சியைத் மேற் கொண்டவர் புத்தக விற்பனையாளர் மாயாவதி.
‘சன்செட் ஹியூஸ்’ என்கிற தானியங்கி புத்தக விற்பனை இயந்திரம் மூலம் புத்தக விற்பனையை ஆரம்பித்த மாயாவதி, வங்கியில் துணை மேலாளராகப் பணிபுரிந்தவர். சிறு வயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் மிகுந்தவர்.