

நண்பர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடினார். நீல நிறத்தில் ஓர் அறை வேண்டும் என்றார். நீல நிறத்துக்கு அப்படி என்ன விசேஷம் என்றேன். “இந்தியாவுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்த நிறம் நீலம்! சர் சி.வி. ராமன் கண்டறிந்த ராமன் விளைவு” என்றார்.
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. இதற்காகவா நீங்கள் நீல நிற அறையைக் கேட்கிறீர்கள் என்றேன். ”நீல நிறம் நிலைத்தன்மை கொண்டது. இந்த உலகில் எந்த மூலையிலிருந்தும் நீலத்தைப் பார்க்கலாம்.