வாழ்வு இனிது
இரு நல்ல உள்ளங்கள்! | அனுபவம் புதுமை
எங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தைகள். நான்தான் மூத்தவள். பொறியியல் படிக்க வைக்க வசதி இல்லாததால், என் அப்பா பட்டயப் படிப்பு படிக்க வைத்தார்.
நான் கட்டமைப்பு பொறியியல் இளங்கலை பகுதி நேரப் படிப்புக்கு 2015இல் விண்ணப்பித்தேன். அப்போது எனக்கு வயது 20. என்னுடன் என் தோழியும் விண்ணப்பித்திருந்தாள். கலந்தாய்வு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது.
