அனுபவம் புதுமை | மாடி பஸ்... மயக்கும் அனுபவம்..!

அனுபவம் புதுமை | மாடி பஸ்... மயக்கும் அனுபவம்..!
Updated on
2 min read

‘மெட்ராஸுக்குப் போனா மாடி பஸ்ல ஏறணும்.’ மெரினா கடற்கரை, எழும்பூர் அருங்காட்சியகம், எல்ஐசி கட்டிடம் போன்றவற்றைத் தாண்டி ஒரு காலத்தில் சென்னைக்கு வருகை தருகிற வெளியூர்வாசிகளின் பயண விருப்பங்களில் ஒன்றாக ‘டபுள் டக்கர்’ பேருந்தும் இருந்தது.

எழுபதுகளில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை எண்பதுகளில் விலக்கப்பட்டு, மீண்டும் 1997இல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தாம்பரம் - பிராட்வே (ஏ18) வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல், சீரமைப்புப் பணிகள் காரணமாக 2008இல் இது நிறுத்தப்பட்டது. வெகுவிரைவில் ‘டபுள் டக்கர்’ மின்சாரப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாகச் சென்னையில் இயக்கப்படும் என்றொரு தகவல் சமீபத்தில் வெளியானது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in