

எல்லா ஊர்களிலும் மந்தைவெளி என ஓர் இடமிருக்கும். அது நெடுங்காலத்திற்கு முன் மாட்டைக் கொண்டுவிடும் இடமாக இருக்கும். பின் ஊர் வளரவளர அதே மந்தை ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும். முதலிலிருந்த இடம், மக்கள் பெருமளவில் வந்து போகும் இடமாக மாறிவிடும்.
கால்நடை வளர்ப்பு பல தொழில்களுக்கும் இணையாக வீடுகளில் நடைபெற்றது. காலை ஒன்பது மணிக்கு வீட்டில் இருந்து மாடுகளை மந்தைக்குப் பத்திக்கொண்டு செல்வார்கள். வேகமாக ஓடும் சில மாடுகளின் முன்னங்காலையும் கழுத்தையும் கயிற்றால் பிணைத்திருப்பார்கள்.