

உணவை விரும்பிச் சாப்பிடும் ‘ஃபுட்டி’யாக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக உணவு விற்பனைத் தொழில் தொடங்க வேண்டுமென்கிற எண்ணம் ஒரு முறையாவது உங்கள் மனதில் எட்டிப் பார்த்திருக்கும். உணகவம் ஒன்றை ஆரம்பித்து நிர்வகிப்பது சாதாரண காரியம் அல்ல.
ஆனால் வீட்டிலிருந்தே உணவைத் தயாரித்து நேரடியாக வாடிக்கை யாளரிடம் கொண்டு சேர்க்கக்கூடிய ‘கிளவுட் கிச்சன்’ முறை சென்னையில் தற்போது பிரபலமாகி வருகிறது. உணவகம் திறக்க வேண்டு மென்றால் வாடிக்கையாளர் அமர்ந்து உண்பதற்கு எனப் பிரத்யேக இடம், சமையல் அறை, வாகன நிறுத்து மிடம், மின் வசதி, உரிய உரிமங் கள் எனப் பல வற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டி யிருக்கும்.
‘கிளவுட் கிச்சன்’ முறை யில் உணவு தயாரிப்பதற்கான இடம் மட்டும் இருந்தால் போதும். முழுக்க முழுக்க ‘டெலிவரி’ சேவை வழியாகவே வியாபாரம் செய்யலாம். இந்தப் புது பாணியிலான ‘கிளவுட் கிச்சன்’ உணவகம் ஒன்றைச் சென்னையில் நடத்திவருகிறார் சமையல் நிபுணரான பஞ்சாபி செஃப் தீபா.
உணவும் சுவையும்
2020ஆம் ஆண்டை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதே ஆண்டில்தான் பலரும் பல புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டும் அவற்றை முயன்றும் பார்த்திருப்போம். செஃப் தீபாவுக்கும் அப்படித்தான். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், பொற்கோயிலுக்கு மட்டுமல்ல சுவைமிகு உணவுக்கும் பிரபலம்தான்.