சென்னையின் அறிவுசார் சொர்க்கம்| பிரிட்டிஷ் கவுன்சில்

சென்னையின் அறிவுசார் சொர்க்கம்| பிரிட்டிஷ் கவுன்சில்
Updated on
2 min read

சர்வதேசப் பண்பாடு, கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அமைப்பு பிரிட்டிஷ் கவுன்சில். உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவரும் இந்த நிறுவனம், பிரிட்டன், ஆங்கில மொழி ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த துறைகளில் பிரிட்டன் உடனான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பாலமாகவும் இது செயல்படுகிறது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு, தேவநேயப் பாவாணர் நூலகத்தைக் கடந்து உள்ளே சென்றால், முற்றிலும் மாறுபட்ட ஒரு நவீன உலகத்தைக் காண முடியும். புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரேயா மீள் வடிவமைப்பு செய்த இந்த பிரிட்டிஷ் கவுன்சில் வளாகம், ஒரு நூலகத்திற்குரிய அமைதியையும் ஒரு தூதரகத்திற்குரிய உச்சக்கட்ட பாது காப்பையும் கொண்டது.

பத்தடி உயரச் சுவர்கள், மெட்டல் டிடெக்டர் சோதனை, பேரேட்டில் தகவல் களைக் கொடுத்துவிட்டு, சர்வதேசத் தரத்திலான கட்டுப்பாடுகளைக் கடந்து தான் ஒருவர் உள்ளே செல்ல முடியும். அண்ணா சாலையின் நெரிசலில் இப்படி ஓர் அமைதியான புல்வெளியும் காபி ஷாப்பும் வியக்க வைக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in