சென்னையில் ஒரு தீவு | சென்னை 387

சென்னையில் ஒரு தீவு | சென்னை 387
Updated on
2 min read

சென்னை போன்ற பெருநகரம் ஒன்றில் ‘தீவு’ என்கிற சொல்லைக் கண்டவுடன் ஆச்சரியம் தொற்றுவது இயல்பு. நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றுக் கழிமுகத்தில் தீவுத்திடல் பகுதி அமைந்திருப்பதைப் போன்று, அடையாற்றுக் கழிமுகப் பகுதியில் அமைந்திருக்கிறது ‘க்விபில் தீவு’ (Quibble Island).

பட்டினம்பாக்கத்தில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ஆற்றுத்தீவின் எல்லையில், ஜேம்ஸ் பிராடி என்பவர் 11 ஏக்கர் பரப்பில் 1796இல் ஒரு கோட்டையைக் கட்டினார்; அது அரசு இசைக் கல்லூரியின் உள்ளே தற்போதும் உள்ளது. அதேநேரம், க்விபில் தீவு என அழைக்கப்படும் தீவின் மறு எல்லை 1816இல் காலியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

க்விபில் தீவின் மையப்பகுதியில் 6.5 ஹெக்டேர் பரப்பில் ஓர் இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1746, அக்டோபர் 24இல் சுமார் ஆயிரம் பேர் கொண்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படை, 10,000 பேர் கொண்ட ஆர்க்காட்டு நவாப் படையை இந்தத் தீவுக்கு அருகே தோற்கடித்தது.

இந்தப் போருக்குப் பிறகே, இங்கு கல்லறைத்தோட்டம் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது இந்தப் பகுதி முழுக்கவே கல்லறை களால் நிறைந்திருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in