50 ரூபாயில் 16 இடங்கள்! | சென்னையில் ‘மினி’ உலா

50 ரூபாயில் 16 இடங்கள்! | சென்னையில் ‘மினி’ உலா
Updated on
2 min read

பேருந்துப் பயணங்களில் கணிச மானவை என்றென்றும் மறக்கவே முடியாத அனுபவங்களைப் பொதித்து வைத்திருக்கும். பயணத்தில்

எதிர்ப்படும் இடங்கள், மனிதர்கள், சூழல் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை, ஒரு தேர்ந்த இசையமைப் பாளரின் இசைக்குறிப்புகள்போலக் கோத்து வைக்கும்.

அப்படி நினைவில் மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்கத்தக்க வகையில் இருக்கிறது ‘சென்னை உலா’. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்தியது.

சென்னையின் முக்கியப் பண்பாட்டு, வரலாற்று, சுற்றுலாத் தலங்களை இணைக்கிற வகையில் இந்தப் பேருந்து இயக்கப் படுகிறது. எழுபதுகள், எண்பதுகளில் பயன்பாட்டில் இருந்த மாநகரப் பேருந்து களை நினைவூட்டுவதாக இந்தப் பேருந்துகளின் வடிவமைப்பு உள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கி வள்ளுவர் கோட்டம், மெரினா கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை என்று 16 இடங் களைத் தொட்டுச்செல்லும் வகையில் ‘சென்னை உலா’ அமைகிறது.

50 ரூபாய் கட்டணம் செலுத்திப் பயணச்சீட்டுப் பெற்றால்போதும்; மேற்சொன்ன 30 கி.மீ. வழித் தடத்தில் இருக்கிற நிறுத்தங்களில் ஏதேனும் ஒன்றில் இறங்கி, குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் அதே நிறுத்தத்துக்கு வந்து, அடுத்த பேருந்தில் ஏறிப் பயணத்தைத் தொடரலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in