

வெனிலா, சாக்லெட், பட்டர்ஸ்காட்ச், பிஸ்தா, ஸ்டிராபெர்ரி என்கிற ருசிகரப் பெயர்களைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது, ஐஸ்கிரீம்தானே? இந்த ஐந்தும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு எல்லாம் முன்னோடி. கப், கோன், குச்சி என விதவிதமான முறையில் ஐஸ்கிரீம்களைச் சாப்பிட்டதெல்லாம் அந்தக் காலம்.
இப்போது பல புதுமையான ஐஸ்கிரீம் வகைகள் வந்துவிட்டன! பொதுவாக ஒரு ஸ்கூப் கப் ஐஸ்கிரீம் என்பதுதான் வழக்கம். இப்போது ‘டபுள்’ ஸ்கூப், ’டிரிபிள்’ ஸ்கூப் என்றெல்லாம் அறிமுகமாகிவிட்டது. அது மட்டுமன்றி மைலோ, தேன், பாப்கார்ன் எனத் தொடங்கி பானிபூரி ஐஸ்கிரீம்வரை புது ருசிகளும் வந்துவிட்டன.