வாழ்வு இனிது
ஒவ்வொரு நோட்டிலும் கட்டபொம்மன் கோட்டை! | பாற்கடல் 33
அப்போது ஐந்தாம் வகுப்புதான் ஆரம்பப் பள்ளியின் பெரிய வகுப்பு. அடுத்து ஆறாம் வகுப்புக்கு, எங்கள் காலத்தில் ஃபர்ஸ்ட் பாரம் என்பார்கள். உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பில் சேரும்போதுதான் மை பேனா வாங்கித் தருவார்கள். ஐந்தாம் வகுப்பில்தான், ஆங்கிலம் என்கிற பெயரில் A,B,C,D சொல்லித் தருவார்கள் அதில் தேர்வுகூடக் கிடையாது.
இப்போது இரண்டு, இரண்டரை வயதிலேயே பிளே ஸ்கூலில் குழந்தைகளைச் சேர்த்துவிடுகிறோம். அவர்கள் தங்கள் மழலை மொழியைக்கூட ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். அவர்கள் பேச்சை வியக்க நாம்தான் குழலுக்கும் யாழுக்கும் ஆங்கிலச் சொல் என்னவென்று தேடிக் கொண்டிருக்கிறோம்.
