

இந்தோனேசியாவோடு தமிழர்களுக்கான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான சாட்சிகளாகக் கல்வெட்டுகள் சுமத்ராவில் கிடைத்துள்ளன. சுமத்ரா உலகின் ஆறாவது மிகப்பெரிய தீவு.
அது வடமேற்கு எல்லையாக இந்தியப் பெருங்கடலையும் வடகிழக்காக மலாக்கா நீரிணையையும் கொண்டு அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கிறது. தொன்மக் காலத்தில் சுமத்ரா, சுவர்ண தீபம் (Island of god) என்றும் சுவர்ண பூமி (Land of gold) என்றும் சம்ஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டது. சுமத்ரா என்கிற சொல் சம்ஸ்கிருதச் சொல்லான ‘சமுத்ரா’ என்கிற சொல்லிலிருந்து மருவியிருக்கிறது.