

என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 5ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினும் 10ஆம் வகுப்பு படிக்கும் தெய்வானையும் ஆளுக்கொரு புத்தகத்துடன் என்னை வரவேற்றனர்! சிறிது நேரத்துக்குப் பிறகு ராமாயணத்தில் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். உடனே அறைக்குள் சென்ற அஸ்வின், ராமாயணப் புத்தகத்தை எடுத்துவந்து, இதில் அந்தக் கதை இருக்கிறது என்றான்.
உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டேன். மீண்டும் அறைக்குச் சென்றவன், ராமாயணத்தின் மொத்த தொகுதிகளையும் மேசையில் அடுக்கிவிட்டான். அடுத்த கதையை ஆரம்பித்தேன். இன்னொரு தொகுதியிலிருந்து அந்தக் கதையையும் காட்டிவிட்டான்! நான் ஆச்சரியத்தில் இருந்தபோது, தன்னிடமுள்ள நூல்களை எல்லாம் ஒரு மேஜையில் அடுக்கினான். அனைத்தும் ஆங்கில நூல்கள்.