

பள்ளி, கல்லூரி நண்பர்கள் படிப்பு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால் எப்படி இருக்கும்? மீண்டும் அனைவரும் ஒன்றுசேரும் அந்த நிகழ்ச்சி ஆடல், பாடல் எனக் கொண்டாட்டமாக இருப்பதைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு கூடி ஓவிய, சிற்பக் கண்காட்சி ஒன்றை ஒருங்கிணைத்து அசத்தி உள்ளனர்!