

விளக்கு வைப்பது என்பது ஒரு நாளின் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால் சூரியன் அடையும் நேரம் வீடுகளில் விளக்கு வெளிச்சம் இல்லை என்றால், வீட்டினுள் பாம்பு போன்ற உயிரினங்கள் வரலாம். அதனால் மாலை ஐந்தரை மணிக்கே விளக்கேற்று வதற்கான ஆயத்தம் செய்யத் தொடங்கி விடுவார்கள்.
விளக்கில் எண்ணெய் இருக்கிறதா, திரி சரியான அளவில் இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்துச் சரி செய்வார்கள். சிம்னியைத் துடைத்து வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சுவரில் விளக்குக் குழி அல்லது விளக்கு மாடம் கட்டி வைத்து இருப்பார்கள். அதில்தான் அந்த விளக்கு இருக்கும்.