

நாகரிக வளர்ச்சிக்கும் கால மாற்றத்துக்கும் ஏற்ப மக்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில பழக்க வழக் கங்கள் நகரம், கிராமம் என்கிற பாகுபாடின்றி இன்றளவும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது ஆச்சரியமானது.
நம் மக்களிடையே அதிகப்படியானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது கால்நடைகள் வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு இணையானதாகவே இருந்தது. காலப்போக்கில் வேளாண் தொழிலிலிருந்து வெளியேறு வோர் எண்ணிக்கை அதிகமாகவும், புதிதாக அந்தத் தொழிலில் ஈடுபடுவோர் சொற்ப அளவிலும்தான் உள்ளது.