

ஓவியம் என்பது பார்க்கும் காட்சியை வெறுமனே பிரதி செய்வதல்ல. எந்த ஒரு சாதாரண கைபேசியும் அதைச் செய்துவிடும். காட்சியை ஓர் ஓவியர் எப்படிப் பார்க்கிறார், எப்படி உள்வாங்கிக்கொள் கிறார், எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது மிக முக்கியம். இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு ஒரே பாணியில் சலிப்பை ஏற்படுத்தும் ஓவியங்கள் பெருகிவரும் உலகில், மரபு முறைகளில் படைப் பாற்றலை வெளிப்படுத்து வது குறைந்து வருகிறது.
ஓவியம், சிற்பம் முதலிய நுண்கலைகளைப் பயிலும் மாணவர்களுக்கு உள்ளூர் உதாரணங்கள், காட்சிரீதியிலான உள்ளூர் எடுத்துக்காட்டு களுடன் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் குறைவு. இந்தக் குறையை ‘Medium is the Message' நூல் மூலம் போக்கியுள்ளார் பேராசிரியர் எஸ்.இளங்கோ.