34 வயதில் ஓய்வுபெற்று உலகை சுற்றும் இளைஞர்

34 வயதில் ஓய்வுபெற்று உலகை சுற்றும் இளைஞர்
Updated on
2 min read

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினால் நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, 34 வயதிலேயே ஓய்வுபெற்ற இந்திய தொழில்நுட்ப வல்லுநரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் உள்ள குக்​கி​ராமம் ஒன்​றில் மிக​வும் பின்​தங்​கிய குடும்​பப் பின்​னணி​யில் பிறந்​தவர் இவர் (வயது34). இவரது தந்தை தொடக்​கக் காலத்​தில் ஒரு தொலைபேசி பூத்​தில் வெறும் 1,500 ரூபாய் மாத ஊதி​யத்​துக்​கு சுமார் 8 ஆண்​டு​கள் பணி​யாற்​றி​னார். பின்​னர் வேறு ஒரு வேலைக்கு சேர்ந்த அவர் ரூ.4 ஆயிரம் சம்​பா​தித்​துள்​ளார்.

இதனால் தனது மகனை தனி​யார் பள்​ளிக்​கூடத்​தில் படிக்​கவைக்க முடிய​வில்​லை. அடிப்​படைத் தேவை​களுக்கே வழி​யில்​லாத இக்​கட்​டான சூழலிலும், அந்த இளைஞர் மனம் தளராமல் அரசுப் பள்​ளி​யில் 12-ம் வகுப்பு வரை பயின்​றுள்​ளார். பின்​னர், ஒரு சிறிய நகரில் உள்ள ஒரு அரசு பொறி​யியல் கல்​லூரி​யில் படித்த அந்த இளைஞர், தங்​கப் பதக்​கம் வென்​றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in