உயர் படிப்புக்கு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை சரிவு ஏன்?

உயர் படிப்புக்கு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை சரிவு ஏன்?
Updated on
2 min read

உயர் படிப்புக்காக அமெரிக் காவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் கடந்த 2025-ம் ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ல் நிகர மாணவர் சேர்க்கை 49.9 சதவீதம் சரிந்து 31,417 ஆக உள்ளது.

இது 2024-ல் 62,679 ஆகவும், 2023-ல் அதிக அளவாக 69,741 ஆகவும் இருந்தது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய உச்சத்தை எட்டிய இது தற்போது ஒரு தேக்கநிலையை அடைந்துள்ளது. 'ஓபன் டோர்ஸ்' (Open Doors) அறிக்க யின் தரவுகள், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், புதிய மாணவர்களின் கூடுதல் வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன.

கட்டண உயர்வு

கல்விக்கான கட்டண உயர்வு, அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் அமெரிக்

காவில் படிப்பதற்கான ஒட்டுமொத்தச் செலவு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மாணவர்களின் குடும்பங்களை மிகவும் எச்சரிக்கையுடன் முடிவெடுக்கத் தூண்டியுள்ளது. மேலும், குடியேற்றக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் விசா நடைமுறைகளில் ஏற்படும் தாமதங்களும் மாணவர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in