

இந்த ஆண்டில் மட்டும் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 4 தவணையாக 1.25% குறைத்துள்ளது. மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் ரெப்போ விகிதம் இப்போது குறைந்துள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதன் பலன் வாடிக்கையாளருக்கு எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.
ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.5% ஆக இருந்த நிலையில், அது கடந்த 2025 பிப்ரவரியில் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6% ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பரில் மேலும் 0.5% குறைக்கப்பட்டு 5.5% ஆனது. இந்நிலையில், நடப்பு டிசம்பரில் மேலும் 0.25% குறைக்கப்பட்டு 5.25%-மாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1.25% குறைந்துள்ளது.