

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். அவர் வீட்டுக் கடன் வாங்கி மாதா மாதம் தவணை செலுத்தி வந்தார். ஒரு நாள் அவருக்கு திடீரென போனஸ் பணம் கிடைத்தது. இந்த பணத்தை வைத்து கடனை முன்கூட்டியே அடைத்துவிட்டால் சுதந்திரமாக இருக்கலாம் என்று யோசித்தார்.
வங்கிக்கு சென்ற அர்ஜுன் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்புவதாக கூறினார். ஆனால் வங்கி அதிகாரி, "முன்கூட்டியே கடனை அடைப்பதற்கு மொத்த அசல் தொகையில் 5% வரை ப்ரீ-பேமண்ட் கட்டணமாக செலுத்த வேண்டும்" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் கடனை அடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டார்.
கடனை சீக்கிரம் அடைப்பதற்கு வங்கிகள் ஊக்கம் தர வேண்டுமே தவிர, தண்டனை தருவது ஏன் என்று அர்ஜுன் மனதுக்குள் புழுங்கினார். இதேபோன்ற பிரச்சினையை தினமும் நம்மில் பலர் எதிர்கொண்டு வருகின்றனர். சில வங்கிகள் கடன் ஒப்பந்தத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு மாறவிடமால் தடுக்கின்றன.