

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப புரட்சியால் சமீப காலமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டாடா கன்சல் டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், 2026-27 நிதியாண்டின் முதல் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் 9,279 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
இது கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத மிகப்பெரிய காலாண்டு பணியாளர் சேர்க்கை உயர்வு ஆகும். இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5,93,798 ஆக உயர்ந்துள்ளது.