ஸ்ரீபெரும்புதூர் - உலகளாவிய உற்பத்தி மையம்

ஸ்ரீபெரும்புதூர் - உலகளாவிய உற்பத்தி மையம்
Updated on
2 min read

பன்​முகப்​படுத்​தப்​பட்ட பொருளா​தாரம், சிறந்த உள்கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் சிறப்​பான கொள்​கைகள் ஆகிய​வற்​றின் மூலம், தொழில் வளர்ச்​சி​யிலும் தனி​நபர் முன்​னேற்​றத்​தி​லும் ஒரு முன்​னணி மாநில​மாக தமிழ்​நாடு தன்னை நிலைநிறுத்தி உள்​ளது. சமீபத்​தில் தமிழ்​நாடு அரசு வெளி​யிட்ட பொருளா​தார ஆய்​வறிக்​கை​யின்​படி, 2024-25-ம் ஆண்​டில் மாநிலம் 11.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்​டி​யுள்​ளது.

இந்​தி​யா​வின் முக்​கிய​மான மாநிலங்​களில் இதுவே மிக​வும் அதி​க​மான வளர்ச்​சி​யாகும். இது தமிழ்​நாடு மாநிலத்​தின் வளர்ச்​சி​யைத் தெளி​வாக காட்​டு​கிறது. சிறந்த கல்​வியறி​வு, தொழில்​நுட்​பக் கல்வி மற்​றும் திறன் மேம்​பாடு ஆகிய​வற்​றின் மூலம் சிறப்​பான மனிதவளத்தை தமிழ்​நாடு தன்​னகத்தே கொண்​டுள்​ளது. அத்​துடன், அதிக உற்பத்தித் திறன் மற்​றும் சிறந்த செயல்​படுகளாலும் மாநிலம் பயனடைகிறது.

இது உற்பத்தி மற்​றும் சேவைத் துறை​கள் ஆகிய இரண்​டுக்​கும் ஆதர​வளிக் ​கக்​கூடிய திறமை​யான பணி​யாளர்​களை உறுதி செய்​கிறது என்று அந்த ஆய்​வறிக்கை மேலும் கூறுகிறது.

இந்த வளர்ச்​சிக்கு எடுத்​துக்​காட்​டாக ஸ்ரீபெரும்​புதூரை விடச் சிறப்​பாக வேறு எந்த ஊரை​யும் விளக்​கி​விட முடி​யாது. முக்​கிய​மாக விவ​சா​யத்தை மட்​டுமே நம்​பி​யிருந்த இந்​தப் பகு​தி, கடந்த 1990-ம் ஆண்​டின் பிற்​பகு​தி​யில் ஒரு கொரிய வாகன உற்பத்தி நிறு​வனத்​தின் வருகை காரண​மாக உலகளா​விய உற்பத்தி வரை படத்​தில் முதன்​முதலாக இடம் பிடித்​தது.

காலப்​போக்​கில், இங்கு தொழில் துறை விரிவடைந்​தது. கடந்த 2007-ம் ஆண்​டில் சாம்​சங் எலெக்ட்​ரானிக்ஸ் நிறு​வனம் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் தனது ஆலையை நிறுவ முடிவு செய்​தது. அந்த முடிவு இப்​பகு​தியை ஒரு வாகன உற்பத்தி மையத்​திலிருந்து ஒரு பெரிய மின்​னணு சாதனங்​கள் உற்பத்தி மைய​மாக மாற்​றியது.

சர்​வ​தேச நிறு​வனங்​கள்

இன்​று, ஸ்ரீபெரும்​புதூர் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் சாம்​சங், பாக்​ஸ்​கான், ப்ளெக்​ஸ், சால்ட்​ காம்ப் மற்​றும் டெல் உள்​ளிட்ட பல உலகளா​விய மின்​னணு மற்​றும் தொலைத்​தொடர்பு உற்பத்தி நிறு​வனங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

அத்​துடன், உள்​நாட்டு மற்​றும் ஏற்​றுமதி சந்​தைகளுக்​கான மொபைல் போன்​கள், லேப்​டாப்​கள் மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களுக்​கான உதிரி​பாகங்​களை வழங்​கும் ஏராள​மான நிறு​வனங்​களும் இங்கு செயல்​படு​கின்​றன. இப்​பகுதி 70 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை வழங்​கி, ஒரு முக்​கிய வேலை​வாய்ப்பு மைய​மாக உரு​வெடுத்​துள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in