ஒற்றை வரி குறுஞ்செய்தியில் உருவான பில்லியன் டாலர்: ‘ஸ்கைரூட்’ சாம்ராஜ்யம்!

ஒற்றை வரி குறுஞ்செய்தியில் உருவான பில்லியன் டாலர்: ‘ஸ்கைரூட்’ சாம்ராஜ்யம்!
Updated on
2 min read

ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை தயாரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இன்று ஒரு பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,555 கோடி) சந்தை மதிப்பை எட்டியுள்ள இந்த விண்வெளி நிறுவனத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால், ஒரு சாதாரண சமூகவலை தளக் குறுஞ்செய்தியும், தொழிலதிபர் முகேஷ் பன்சாலின் அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டுமே இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கார்ப்பரேட் நிர்வாக அறையிலோ, பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டிலோ இந்த வரலாற்றுப் பயணம் தொடங்கவில்லை. மாறாக ஒற்றை வரி குறுஞ்

செய்தியில் இந்த பயணம் ஆரம்பமானது. கடந்த 2018-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிபுரிந்த பவன் சந்தனா மற்றும் பாரத் தாகா ஆகிய இரு இளம் பொறியாளர்கள், தங்கள் அரசுப் பணியைத் துறந்து இந்தியாவில் ஒரு தனியார் ராக்கெட் நிறுவனத்தைத் தொடங்க விரும்பினர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in