

சர்வதேச நிலவரங்களால் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுபோல தொழில் துறையில் அதிகம் பயன்படும் வெள்ளியின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது தொழில் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து கோவை தொழில் துறையினர் கூறியதாவது: இன்றைக்கு மாற்று எரிசக்தியாக இருக்கும் சோலார் எனர்ஜி உபகரணங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் என பலவற்றில் வெள்ளியின் பயன்பாடு மிக அதிகளவில் உள்ளது.
இதனால் வெள்ளி விலையேற்றம் நிச்சயம் தொழில் துறையினரை பாதிப்படைய வைக்கும். கடந்த ஆண்டு ஆரம்பம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது, ஒரே ஆண்டில் 52 முறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை கடந்தது.