

சில பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கூடுதல் வருமானம் கிடைக்கும் விதமாக வேறு எதுவும் செய்ய முடியாது. செய்யக்கூடாது. பணி நியமன உத்தரவில் வேறு எங்கும் பகுதி நேரமாக வேலை செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
அப்படிச் செய்வதை, ‘பகல் வேலை தவிர, இரவிலும்’ எனும் பொருள்பட, ‘மூன்லைட்டிங்’ என்று அழைப்பார்கள். நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பவர்கள் செய்ய மாட்டார்கள். செய்தால், அது குற்றம். யாராவது செய்வது தெரிய வந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.