

ஒரு ஆள் தெரு விளக்குக்கு அடியில் குனிந்தபடி எதையோ தேடிக் கொண்டிருந்தார். அங்கே வந்த வேறு ஒருவர், என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, என்னுடைய வைர மோதிரத்தை தேடுகிறேன் என்றார்.
“அப்படியா! நன்றாகத் தெரியுமா? இங்கேதான் தவறியதா?’
“தவறவிட்டது இங்கே இல்லை. அதோ, இருட்டாக இருக்கிறதே. அந்த மரத்தடியில்”.
“என்னய்யா வேடிக்கை இது! தொலைத்தது அங்கே. ஆனால் தேடுவது இங்கேயா?”
“மரத்தடியில் வெளிச்சம் இல்லையே! இங்கேதானே வெளிச்சமிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் அந்த ‘மேதாவி’.