இனி ‘ஒரே நாடு, ஒரே கேஒய்சி’

இனி ‘ஒரே நாடு, ஒரே கேஒய்சி’
Updated on
1 min read

இந்​திய நிதித்​துறை​யில் வெளிப்​படைத்​தன்​மை​யைக் கொண்​டு​வர​வும், வாடிக்​கை​யாளர்​களின் அலைச்​சலைக் குறைக்​க​வும் மத்​திய அரசுஅறி​முகப்​படுத்​திய CKYC (Central Know Your Customer) முறை, தற்​போது வங்கி மற்​றும் முதலீட்​டுத் துறை​யில் மிகப்​ பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்தி வரு​கிறது.

முன்​பெல்​லாம் ஒரு நபர் புதிய வங்கி கணக்கு தொடங்​கவோ அல்​லது பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​யவோ விரும்​பி​னால், ஒவ்​வொரு நிறு​வனத்​துக்கும் தனித்​தனி​யாக அடை​யாளச் சான்​றுகளைச் சமர்ப்​பிக்க வேண்​டி​யிருந்​தது. இந்​தப் பெரும் சுமை​யைக் குறைப்​பதே இந்த 'மத்​திய வாடிக்​கை​யாளர் விவரப் பதிவகத்​தின்' முக்​கிய நோக்​க​மாகும்.

என்ன இந்த சிகேஒய்​சி?

மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் CERSAI (Central Registry of Securitisation Asset Reconstruction and Security Interest of India) அமைப்​பால் நிர்​வகிக்​கப்​படும் ஒரு டிஜிட்​டல் களஞ்​சி​யமே இது. ஒரு​முறை நீங்​கள் ஏதேனும் ஒரு நிதி நிறு​வனத்​தில் முறை​யாக KYC விவரங்​களை அளித்​து​விட்​டால், அவை டிஜிட்​டல் முறை​யில் இந்​தப் பதிவகத்​தில் சேமிக்​கப்​படும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in