இனி மியூச்சுவல் ஃபண்டை பரிசாக வழங்கலாம்!

இனி மியூச்சுவல் ஃபண்டை பரிசாக வழங்கலாம்!
Updated on
2 min read

உறவு, நட்பு என நெருக்​க​மான ஒரு​வரின் பிறந்​த​நாளுக்கு என்ன பரிசு வாங்​கலாம் என்று யோசிக்​கிறீர்​களா? தங்​கம், விடு​முறை வவுச்​சர், கிப்ட் வவுச்​சர் என்று சுழன்று கொண்​டிருந்த பரிசுக் கலாச்​சா​ரம் இனி ஒரு புதிய திசை​யில் பயணிக்​கப் போகிறது.

மியூச்​சுவல் ஃபண்ட் முதலீட்​டையே நேரடி​யாக பரி​சாக வழங்​கும் வாய்ப்பை இந்​தி​யப் பங்​குச் சந்தை ஒழுங்​கு​முறை ஆணை​யம் (செபி) உரு​வாக்கி வரு​கிறது. இந்த புதிய திட்​டம் குறிப்​பாக முதல்​முறை முதலீட்​டாளர்​களை நிதிச் சந்​தை​யில் இணைக்​கும் நோக்​கத்​துடன் முன்​மொழியப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்​கு​மாறு பொது​மக்​களுக்கு செபி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

திட்​டம் எப்​படி செயல்​படும்?

இந்​தத் திட்​டத்​தில், நீங்​கள் வங்கி பரி​மாற்​றம் அல்​லது UPI மூலம் ஒரு மியூச்​சுவல் ஃபண்ட் கிஃப்ட் கார்டை (Gift Prepaid Payment Instrument) வாங்​கி, உங்​கள் நண்​பர் அல்​லது உறவினருக்கு பரி​சாக வழங்​கலாம்.

அதைப் பெற்​றவர், சம்​பந்​தப்​பட்ட மியூச்​சுவல் ஃபண்ட் நிறு​வனத்​தின் (ஏஎம்​சி) இணை​யதளத்​தில் சமர்ப்​பித்​து, தனக்கு விருப்​ப​மான திட்​டத்​தில் முதலீடு செய்​து​கொள்​ளலாம்.

பரிசை வழங்​குபவர் ஒரு திட்​டத்தை பரிந்​துரைத்​தா​லும் பெறு​பவர் தனது விருப்​பப்​படி வேறு திட்​டத்​தை​யும் தேர்வு செய்​ய​லாம். இதற்​காக ஒரு விநி​யோகஸ்​தரின் உதவியை​யும் நாடலாம். இது பெறு​பவருக்கு முழு சுதந்​திரத்தை அளிக்​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in