

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஏராளமான உடல்நலக் கோளாறுகளுக்கும் காரணமாகிவிட்டது. இதனால் ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர்.
அந்த வகையில், ஆன்லைனில் கேட் ஜிபிடி என்ற பெயரில் அறியப்படும் கேட் கோட்ஸே என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் தொழில்முனைவோர், செல்போனுடன் இணைந்த பழைய பாணியிலான லேண்ட்லைன் போனை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பழைய லேண்ட்லைன் போனில் வயரை சுழற்றிக்கொண்டு நண்பர்களுடன் பேசுவது எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நினைவை மீட்கலாம் என்று தோன்றியது.