ரூ.250-ல் தொடங்கி.. ரூ.90 லட்சம் வர்த்தகம்.. காளான் வளர்ப்பில் கேரள பெண் சாதனை

ரூ.250-ல் தொடங்கி.. ரூ.90 லட்சம் வர்த்தகம்.. காளான் வளர்ப்பில் கேரள பெண் சாதனை
Updated on: 
2 min read

கேரளாவைச் சேர்ந்த ஷிஜேவுக்கு கணவர் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பிறகு பகல் நேரத்தில் தனிமை வாட்டியது. விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த அவருக்கு, தனது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

2007-ம் ஆண்டில், தனது வீட்டின் ஒரு மூலையில் காளான் வளர்க்கலாமே என்ற யோசனை தோன்றியது. இதற்காக வெறும் ரூ.250-ஐ மட்டுமே முதலீடு செய்து, சிப்பி காளான் (Oyster Mushroom) வளர்க்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இது ஒரு பொழுதுபோக்காகவும், பரிசோதனையாகவும் மட்டுமே இருந்தது.

தனது கணவர் தங்கச்சனுடன் இணைந்து ஷிஜே செய்த பரிசோதனைகள் படிப்படியாக வெற்றியைக் கொடுக்கத் தொடங்கின. எந்த ஒரு பெரிய முதலீடும் இல்லாமல், தங்களது சொந்த முயற்சியாலும் அனுபவங்கள் மூலமாக கற்ற பாடங்களாலும் காளான் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றனர்.

2008-ம் ஆண்டு தங்களது விவசாய நிலத்தில் சுமார் ரூ.50,000 முதலீடு செய்து 600 காளான் படுக்கைகளை உருவாக்கினர். 2009-ல் 'கூண் ஃப்ரெஷ்' (Coon Fresh) என்ற பெயரில் தங்களது நிறுவனத்தைத் தொடங்கினர்.

Loading content, please wait...

X