ஜப்பானின் புதிய ஆட்சியும்.. இந்திய பொருளாதார எழுச்சியும்..

ஜப்பானின் புதிய ஆட்சியும்.. இந்திய பொருளாதார எழுச்சியும்..
Updated on
3 min read

இருபதாம் நூற்​றாண்​டின் இறு​தி​யில், தரம் மற்​றும் நவீனத் தொழில்​நுட்​பத்​தின் உலகளா​விய அடை​யாள​மாக `மேட் இன் ஜப்​பான்' (Made in Japan) திகழ்ந்​தது. ஆனால், 21-ம் நூற்​றாண்​டில் ஜப்​பான் பொருளா​தா​ரம் சரிந்து வரு​வதை நாம் உணர முடிகிறது.

அதேநேரம் கடந்த சில ஆண்​டு​களாக உலகிலேயே வேக​மாக வளரும் நாடாக இந்தியா உரு​வெடுத்​துள்​ளது. இதன்​படி, கடந்த 2024-25 நிதி​யாண்​டில் இந்தியா உலகின் 5-வது பொருளா​தார நாடாக இருந்​தது. நடப்பு 2025-26 நிதியாண்​டில் ஜப்​பானை பின்​னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்​துள்​ளது. 2030-க்குள் ஜெர்​மனியை பின்​னுக்கு தள்ளி 3-ம் இடம் பிடிக்​கும் என கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் ஜப்​பான் பொதுத்​தேர்​தலில் பிரதமர் சனே டகைச்சி தலை​மையி​லான கூட்​டணி 352 இடங்​களைக் கைப்​பற்றி `அறு​திப் பெரும்​பான்மை' பெற்​றுள்​ளது. இந்த வலு​வான அரசி​யல் தலை​மை, ஜப்​பான் தனது பொருளா​தார வியூ​கங்​களை இந்​தி​யா​வுடன் இணைந்து மறுசீரமைக்க ஒரு புதி​யப் பாதையை வகுத்​துள்​ளது.

முதி​ய​வர்​கள் அதி​கரிப்​பு, குறைந்த பிறப்பு விகிதம் மற்​றும் தேக்​கமடைந்த உள்​நாட்​டுத் தேவை ஆகியவை ஜப்​பானின் பொருளா​தா​ரச் சரிவுக்கு முக்​கியக் காரணி​களாக அமைந்​தன. இருப்​பினும், வாகன உற்​பத்​தி, ரோபோட்​டிக்ஸ் மற்​றும் துல்​லியப் பொறி​யியல் துறை​களில் ஜப்​பான் இன்​றும் உலகத் தலை​வ​னாகத் தன் ஆதிக்​கத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வுக்​கான வாய்ப்​பு​கள்: பிரதமர் சனே டகைச்​சி​யின் வெற்​றி, ஜப்​பானின் பாது​காப்பு மற்​றும் பொருளா​தா​ரக் கொள்​கை​களில் ஒரு புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. குறிப்​பாக, சீனா மீதான வர்த்தக சார்​பைக் குறைக்க, `சீனா பிளஸ் ஒன்' வியூ​கத்​தின் மூலம் இந்​தியா போன்ற ஜனநாயக நாடு​களு​டன் தனது விநி​யோகச் சங்​கி​லியை இணைக்க ஜப்​பான் முடி​வெடுத்​துள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in